முதியோர் வாழ்க்கைமுறை - சில கருத்துக்கள்
முதியோர் வாழ்க்கைமுறை - சில கருத்துக்கள் “‘ முதுமை என்பது ஆனந்தமாக ரசிக்க வேண்டிய பருவம். முதுமையை ரசிக்கத் தெரியாதவன் முட்டாள். நான் முதுமையை ரசித்துக்கொண்டிருக்கிறேன்.” என்று கேரள மாநிலத்தின் முன்னாள் முதுபெரும் அரசியல் பிரமுகர் சமீபத்தில் அளித்த பத்திரிகை பேட்டியில் கூறினார் . வாழ்க்கையில் ,பல தேவைகளில் பணமும் ஒன்று. ஆனால். பணமும் பொருளும் மட்டுமே வாழ்க்கை அல்ல . பல பருவங்களைக்கடந்து, தற்போது முதுமைப்பருவத்தில் இருக்கிறோம். நினைத்துப்பார்த்தால் ஒவ்வொரு பருவத்திலும் -வாலிபத்திலும் -நடுத்தர வயதிலும் வேலை செய்து அல்லது தொழில் செய்து சம்பாதித்திருந்தாலும் மனநிறைவோடு இருந்தோமா -என்றால் இல்லை. ஒவ்வொரு நிலையிலும் தேவைகள் அதிகரித்துக்கொண்டே இருக்க ,பிரச்னைகளும் போராட்டங்களுமாக வாழ்க்கை அமைந்தது. அமைதியாக கழிக்க வேண்டிய முதுமையிலும் பணம் -பொருளைத்தேடி ஓடிக் கொண்டே இருக்க வேண்டாம். முதுமையில் ஓய் வூதியம் - சேமிப்புக்கு கிடைக்கும் வட்டி - சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வாடகை வருமானம் ஏதாவது ஒரு வகையில் கிடைக்கும். வறுமை கோட்டுக்கு கீழே இருந்தால் அரசாங்கம் தரும் முதியோர் ஓய்வூதியம்...